கவியருவியில் காட்டாற்று வெள்ளம்… சுற்றுலா பயணிகளுக்கு தடை : விரைவில் நிரம்பும் ஆழியார் அணை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 7:23 pm

கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் கவியருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கல் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கவியருவி பகுதியில் தொடர்ந்து ஏழு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை, ஆழியார் அணை பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு ஆர்வமாக வந்து செல்கின்றனர். நீர்வரத்து அதிகமாக வருவதால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை பெய்தால் விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என பொதுபணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • Manikandan interview highlights ‘தொலைச்சுப்புடுவேன்’ உன்னை…மணிகண்டனை மிரட்டிய பிரபல நடிகர்…எதற்குனு தெரியுமா..!