திராவிட மாடல் என்பது செயலோ, சேவையோ சார்ந்த அரசியல் அல்ல… வெறும் செய்தி அரசியல் : திமுகவை விமர்சித்த சீமான்..!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 1:59 pm

சர்ச்சைக்குரிய காளி போஸ்டர் குறித்து வழக்குப்போட்டது தேவையில்லாதது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மீஞ்சூர் பொதுகூட்டத்தில் பேசிய நாம் தமிழர் சீமான், திராவிடர்களுக்கும், தங்களுக்கும் நடக்கும் சண்டை பங்காளி சண்டை என்றும், நாட்டை நாசமாக்கியவர்கள் காங்கிரஸ் மறறும் பாஜகவினர் என்று கூறினார்.

மேலும், அரசு பணத்தில் சமாதி கட்டுவதாகக் கூறிய அவர், இடிந்த வீடுகளை வீடுகளை கட்ட முடியாமல் இருக்கும் நிலையில் சமாதிகளுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்..? என்றும், வந்தவன் போனவன் எலோருக்கும் சிலை உள்ளதாகவும், அனைத்தையும் பெயர்த்து கடலில் தூக்கி போடுவேன் என்று தெரிவித்தார்.

வஉசி திருவுருவ சிலையை சென்னையில் நிருவுவேன் என்று கூறிய சீமான், தமிழர்களுடைய அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பது கொடுமை என்றும், தமிழர் அல்லாதவர்களை தமிழுக்காக தொண்டு செய்தார்கள் உழைத்தார்கள் என அடையாளப்படுத்துவது கொடுமை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என கூறியவர்கள், வீடு திறப்பு விழாவிற்கு மோடியையும், சிலை திறப்புக்கு வெங்கையா நாயுடுவை நானா கூட்டி வருகிறேன் என்ற அவர், தமிழர்கள் ஒன்றாக இருந்திருந்திருந்தால் தமிழர் அல்லாதவர்கள் தமிழகத்தை ஆளமுடிந்திருக்காது என்றும், ஓநாய்களாக திராவிடரா்கள் திரிகிறார்கள், என தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது :- திமுகவின் திராவிட அரசியல் என்து செயல் அரசியலோ, சேவை அரசியலோ அல்ல. அது வெறும் செய்தி அரசியல்தான். இளையராஜாவை வைத்து பாஜகு அரசியல் செய்கிறது. இளையராஜாவுக்கு அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவே ஓட்டுப்போட மாட்டார், என தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 713

    0

    0