மீண்டும் வெடித்த போராட்டம்.. அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மாணவர்கள் பேரணி : 144 தடை உத்தரவு போட்ட காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 9:11 pm

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழகங்களின் மாணவர் கூட்டமைப்பு IUSF மாணவர்கள் களனியில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி கோட்டை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இம்மாணவர்கள் நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1591

    0

    0