நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, ஷாருகான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

Author: Rajesh
9 July 2022, 3:05 pm

நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜுன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, இதையடுத்து கேரளாவுக்கு சென்று அங்கு நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசிபெற்றனர்.

அவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு ஜோடியாக ஹனிமூன் சென்றனர் .பின்னர் தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கான வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததால், இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவ்வப்போது அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் விக்கி.

அந்த வகையில் தற்போது திருமணத்தில் எடுத்த கலந்து கொண்ட ரஜினி,ஷாருகான் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu