விக்ரம் தந்த வெற்றி, அடுத்த படத்திற்கு கமல்ஹாசன் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Author: Rajesh
9 July 2022, 5:31 pm

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு மாஸாக வெளியாகி இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் நடிப்பில் படம் வெளியாக ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். விமர்சனங்களும் நல்ல முறையில் வந்தது, தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ஹிட்டாக ஓடியது.

ரூ. 120 முதல் ரூ. 130 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. விக்ரம் பட வெற்றியால் நடிகர் கமல்ஹாசன் ரூ. 130 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது,

இப்போது இணையத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி யுள்ளது. அதாவது அடுத்த படத்திற்கு கமல்ஹாசன் ரூ. 150 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!