க்யூ ஆர் கோடு இருந்தா அனுமதி : அதிமுக பொதுக்குழுவில் நவீன அடையாள அட்டை… போலியாட்கள் வருவதை தவிர்க்க சிறப்பு ஏற்பாடு!!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2022, 2:42 pm
நாளை அதிமுக பொதுக்குழு நடைபெறும் நிலையில் க்யூ ஆர் கோடுடன் கூடிய நவீன அடையாள அட்டை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நாளை (ஜூலை 11 ஆம் தேதி ) வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தனியார் மண்டபத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுக்கு க்யூஆர் கோடு அடங்கிய ஆர்எப்ஐடி முறையிலான நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடையாளஅட்டைகளை ஸ்கேன் செய்ய அதிநவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுக்குழு உறுப்பினர் அடையாள அட்டையில் RFID – Radio Frequency Identification system நவீன முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டு உறுப்பினர்களின் வருகை பதிவேடு பதிவு செய்ய உள்ளது #அதிமுக
— Stalin SP (@Stalin__SP) July 10, 2022
போலி அடையாள அட்டை தயாரித்து கடந்தமுறை பலர் பொதுக்குழுவிற்கு வந்ததால் அதை தடுக்க இந்த ஏற்பாடாம் pic.twitter.com/w7OocO3iJ8
க்யூஆர் கோடு அடையாள அட்டை உள்ளவர்கள் தங்களது அட்டையை இதில் நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து அது உண்மையானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அனைவரும் உள்ளே அனுமதிக்கபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.