மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாக கூறி ஏமாற்றுகிறது : பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 5:48 pm

தமிழகத்தில் போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம்,அரப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது .

இதில் நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன், எல்.முருகன், கார்த்தியாயினி, நயினார் நாகேந்திரன் ,எச்.ராஜா ,உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய, பொன் .ராதாகிருஷ்ணன், இயற்கை விவசாயி தமிழகத்தை சேர்ந்த நம்வாழ்வாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்,

மத்திய அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் திமுக அரசு ஒத்துழையாமை செய்து வருவது கண்டிக்கதக்கது.

மேலும் மத்திய அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்ததாக கூறுவதும் ஏமாற்றும் வேலையாகும். கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பாக தமிழில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சியடையாமல் தோல்வி அடைந்துள்ளனர் . இது தமிழுக்கு பெருத்த அவமானம். மேலும் தமிழக அரசு செயல்பாடுகள் சரியானவையாக இல்லை.

தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா அபின் மதுவகைகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சணையும் ஏற்படுகிறது.

போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 958

    0

    0