உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷ் : அர்ஜூன் சம்பத் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2022, 9:06 pm
இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாநில, மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி கூட்டமைப்பு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ள 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா வின் வந்தேமாதரம் பாதயாத்திரை, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் குறித்ததான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத், தென் தமிழகத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆந்திராவை சேர்ந்தவனுக்கு எம்பி பதிவு அளிக்கப்பட்டுள்ளது தமிழருக்கு தவிர மற்ற மாநிலங்களில் இதை கட்சி பாகுபடு என்று வரவேற்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் இளையராஜாவுக்கு எம்பி பதவி கொடுத்தது அவர் தலித் அவருக்கு கோடிக்கண ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே பிஜேபி வாக்களிப்பார்கள் எனவே,கொடுத்து விட்டார்கள் எனக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் தான் எது செய்தாலும் ஜாதி எது செய்தாலும் எதிர்ப்பு இந்த மாதிரி ஒரு சூழலை இந்த திராவிட மாடல் சிந்தனையை இந்த பூமியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு துறைகளில் அந்தந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் 75 வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை செய்யாமல் இருக்கின்றனர். தமிழக அரசு தனது கடமையிலிருந்து தவருகிறது இது எனது குற்றச்சாட்டு.
இந்த 75 ஆண்டு விழாவை தமிழக அரசு முழுவதும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன். ஆ ராசா அவர்கள் தமிழக முதல்வரை அருகில் வைத்துக் கொண்டு தேவைப்பட்டால் தமிழ்நாடு கேட்போம் என பேசி இருக்கிறார். நாங்கள் வேறு இந்தியா வேறு என செயல்பாடுகள் பேச்சுக்கள் இது எல்லா இடத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இப்போது அர்பன் நக்சல்கள் எல்லாம் இதய சிந்தனை உள்ளவர்கள் எல்லாம் அமெரிக்காவில் Fitna என்ற அமைப்பு நடத்தக்கூடிய மாநாடு இதில் நமது முதல்வர் காணொளி காட்சி மூலம் பேசுகிறார்.
நாம் அனைவரும் இந்தியர்கள் இங்கு வந்து தனிநாடு பிரிவினை பேசுவது இதைப் பற்றி பேசுவது தவறானது. நாங்கள் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்று மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது ஹிந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு சேர, சோழ, பாண்டியன் மாநிலமாக பிரிக்க வேண்டும். குறிப்பாக தென் மாநில மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
திமுக செய்தியாளர் பாசிட்டிவாக என்ன சொல்கிறார் என்றால் . மூன்று மாநிலம் உருவானால் 3 மாநிலத்தின் திமுக முதலமைச்சராக வருவோம் என கூறுகின்றனர். எனவே மு க ஸ்டாலின் இந்த மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கல்வித்தர மிகவும் மோசமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழகத்திலே புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் தான் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை வளர்ச்சி அடையும்.
தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்க மகேஷ் பொய்யா மொழி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும், அவருடைய ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்களை எடுத்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயட்சி இது பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றது. மாவட்டத்திற்கு உள்ளாட்சிகளுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. பாரதப் பிரதமர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் பொருந்தியதாக இருக்க வேண்டும் நேரடியாக உள்ளாட்சியை வைத்து தான் பிரதமர் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுதந்திரம், சுயாட்சி வழங்கிட வேண்டும்.
லீலா மணிமேகலை பெண்ணியம் என்ற போர்வையில் ஆபாசமான வக்கிரமான ஒரு சிந்தனையாளர். அவர் தன்னை கடவுள் நம்பிக்கை அற்றவர் என்று சொல்லிக் கொள்கிறார். காளி கையில் குடியிருப்பது போல சிகரெட் இருப்பது அவர்கள் ஏன் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படி ஒரு போஸ்டர் என வெளியிட வேண்டும்.
இப்படி ஒரு தலைப்பட்சமாக இந்து கடவுளை மோசமாக சித்தரித்து விட்டால் இன்னொரு வாஸ்து காரர்கள் சந்தோஷப்படுவார்கள் அவர்கள் தங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று இது ரொம்ப தவறு இந்த நிலை மாற வேண்டும். திமுக காரர்கள் இது அதிகமாக செய்கின்றனர். இந்து கடவுளை இழித்து பேசி மத மாற்றத்திற்கு அவர்கள் உடந்தையாக உள்ளனர். Fitna மாநாட்டில் அமெரிக்காவில் கலந்து கொண்டவர்களை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைச்சி சாப்பிடுவது ஹிந்து மதத்தில் சர்வ சாதாரணமான ஒன்று. பசுமாடு தெய்வம் அதனை இது சமயம் ஒத்துக் கொள்வதில்லை. குறிப்பாக தமிழர்கள் ஒற்றுக்கொள்வதில்லை தமிழர்கள் அவற்றை போற்றி வணங்குபவர்கள். வேண்டுமென்றே ஒருதலைப் பட்சமாக திராவிட கழகத்தினர் மாட்டுக்கறி விருந்து நடத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சமய உணர்வுகளை புண்படுத்தக்கூடிய இத்தகைய நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும்.
இந்து அறநிலை துறை நிர்வாகம் எப்படியாவது சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கைப்பற்ற வேண்டும் திறன் இருக்கின்றனர். ஹிந்து அறநிலையத்துறையில் இருக்கின்ற சேகர்பாபு இந்த அறநிலைத்துறை இருக்கின்ற சேகர்பாபு 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வீட்டுலே நின்று கூறுகிறார். வெள்ளை அறிக்கை அவர் சமர்ப்பிக்கட்டும்.
பூசாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் மனம் புண்படும்படி வேலைகள் செய்யக்கூடாது. பொதுவாக எங்களது கோரிக்கை சர்ச் சொத்துக்கள் கிறிஸ்தவர் கையில், மசூதி சொத்துக்கள் முஸ்லிம் கையில் ஆலய சொத்து மட்டும் ஏன் அரசாங்கத்திடம்
திருக்கோயில்களை நிர்வாகம் செய்ய அரசு அரசியலற்ற வாரியத்தை உருவாக்கி ஒப்படைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை என தெரிவித்தார்.