ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய அஜித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
11 July 2022, 11:15 am

திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அஜித்.

இப்படத்தின் First லுக் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் நாடு முழுவதும் பைக் ரைட் சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், அவ்வப்போது ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவரின டி.சர்ட்டில் ஆட்டோகிராப் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

  • gautham karthik shortened his name as grk தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?