அதிமுக சறுக்கிய போதெல்லாம் தூக்கி நிறுத்திய சசிகலா… இப்போ, அவரது நிலைமை… கண்ணீர் விட்டு அழுத திவாகரன்..!!
Author: Babu Lakshmanan12 July 2022, 6:06 pm
அதிமுக சறுக்கிய போதெல்லாம், தூக்கி நிறுத்திய சசிகலா தற்போது சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி திவாகரன் கண்ணீர் விட்டு அழுதார்.
தஞ்சையில் சசிகலா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா சசிகலா மற்றும் திவாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலாவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது.
பின்பு மேடையில் திவாகரன் பேசியதாவது :- ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போது சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க நினைத்தார். ஆனால் சசிகலாவோ அதனை அன்புடன் மறுத்தார். அப்படி பட்டவரின் விசுவாசத்தை தற்போது அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் பலர் மறந்து விட்டனர். அவரால் பதவிகளை பிடித்தவர் ஏராளம்.
எங்கள் வீட்டு கதவை திறந்தவர்களுக்கு கூட பதவி கிடைத்துள்ளது. அவர்கள் எல்லாம் நன்றியை மறந்து விட்டார்கள். இதனால் சசிகலாவின் கரத்தை வலுப்படுத்த அண்ணா திராவிடர் கழகத்தை அ.தி.மு.க.வில் இணைத்துள்ளோம். அதிமுக சறுக்கிய போதெல்லாம் சசிகலாவும், நடராசனும் தூக்கி பிடித்தார்கள். ஆனால், தற்போது சசிகலா சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை, என கூறி கண்ணீர் விட்டு அழுதார்.