ஆதிதிராவிடர்கள் நம் மூதாதையர்கள்.. எங்க உரிமை எங்களுக்கு தேவை என்பதுதான் திராவிட மாடல் : மார்தட்டும் திருச்சி சிவா..!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 1:08 pm

சேலம் : ஆதிதிராவிடர்கள் நமது மூதாதையர்கள் என்று எடுத்துக் கூறிய கட்சி திமுக என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் திமுக இளைஞர் அணி சார்பாக திராவிட மாடல் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றனர்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேசிகையில், “திமுக என்ற தியாக தீபத்தை பாதுகாக்க வேண்டும். திமுக கொடியை உயர்த்தி பிடிக்க வீரர்களை தேடிவந்துள்ளோம். பிறப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறுவதை யாராவது ஏற்பார்களா..? தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்று கூறிய இன மக்களை ஆதிதிராவிடர் என்றும், அவர்கள் தான் மூதாதையர் என்று கூறிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். யாரையும் விமர்சனம் செய்வதில்லை. ஆனால் எங்களது உரிமை எங்களுக்கு வேண்டும் என்று கேட்பதுதான் திராவிட மாடல்,” எனவும் பேசினார்.

பின்னர், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் கூறுகையில், “பிராமணர்கள் சமஸ்கிருதத்தை தூக்கிபிடித்து நின்று அவர்கள் மட்டும் மருத்துவம் படித்த நிலையை மாற்றி, ஏழைவிட்டுப் பிள்ளைகளும் மருத்துவம் படிக்கலாம் என்ற நிலையை திமுக உருவாக்கியது.

தமிழகத்தில் திமுக 3 ஆயிரம் ஆண்டுகள் இருந்த மூடப்பழக்க வழக்கங்களை வேரறுத்து மாற்றி அமைத்தது. தமிழகத்தில் மோடியின் வித்தை பலிக்காது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகள் திமுக தான் வெற்றிபெறும். தமிழகத்தில் சமூக நீதியை கடைபிடிக்கின்ற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஆனால் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கின்ற ஒரு இயக்கம் தான் மத்தியில் ஆளும் பாஜக கட்சி. அதற்கு அதிமுக கட்சி துணை போகின்றது.

தமிழகத்தை வழிநடத்துகின்ற தலைவர்களின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான், அவருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.மாநிலத்திலிருந்து மத்தியில் அரசியல் கற்று கொடுக்க வைத்தவர் கருணாநிதி தான், எனவும் கூறினார்.

  • Suriya Bike Ride with Actress Photos Viral சூர்யாவுடன் பைக்கில் சுற்றும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் VIDEO!
  • Views: - 812

    0

    0