நயன்தாராவ பக்கத்துல வெச்சுட்டே காத்து வாக்குல ரெண்டு காதல் செய்த விக்னேஷ் சிவன் : வைரலாகும் போட்டோஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 4:53 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை தான் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருக்கு நிகராக சம்பளம் வாங்கி வருவது மட்டும் இல்லாமல் சோலா ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமிழகமே ஆச்சரியப்படும் அளவில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடித்த கையோடு, தாய்லாந்துக்கு தேனிலவு சென்ற நயன்தாரா விக்கி ஜோடி தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். தற்போது ஷாருக்கானுடன் இந்தி படமான ஜவான் திரைப்படத்தில் நயன் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ஜவான் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் பாலிவுட் நடிகை மலைகா அரோராவை சந்தித்துள்ளார்கள். அப்பொழுது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

மலைகா அரோரா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் தைய்யா தைய்யா பாடலில் நடனமாடியிருப்பார். அதை தவிர பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். 48 வயதானாலும் இன்னும அதே மினுக்கோடு நயன் மற்றும் விக்கியோடு போஸ் எடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 803

    6

    0