பாதுகாப்பு என்ற பெயரில் அலட்சியம்… காவல்துறை மீது இபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு… அதிமுக அலுவலக சீல் வழக்கில் காரசார வாதம்..!!
Author: Babu Lakshmanan14 July 2022, 4:19 pm
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீசார் முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் மாறிமாறி தாக்கி கொண்டனர். மேலும், ராயப்பேட்டையில் சாலையோரத்தில் இருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உதைத்தனர்.
இதையடுத்து, சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அதிமுக அலுவலத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும், யாருக்கு உரிமை உள்ளது என்பது குறீத்து ஜுலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இருதரப்புக்கும நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுக அலுவலகடிததிற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தரப்பு அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
அதாவது, அதிமுக பொதுக்குழுவையொட்டி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர் அத்துமீறி உள்ளே நுழைந்து ஆவணங்களை எடுததுச் சென்றனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை. 400க்கும் மேற்பட்டோர் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை, என தெரிவித்தனர்.
இதனிடையே, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.