விஜயுடன் Romance Video ! பலரும் பார்க்காத காலா ஹீரோயின் ஈஸ்வரி ராவ் UNSEEN Video..!

Author: Rajesh
15 July 2022, 7:00 pm

ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது.

ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.

‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

இவர் l தற்போது காக்கி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறாராம். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் KGF 2 – வில் Yash- க்கு பிறகு இவருக்குதான் பெயர் அதிகம்.

இந்நிலையில், இவர் இளம் வயதில் தளபதி விஜயுடன் Romance பண்ண வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. இந்த பாடல் இடபெற்ற படம் நாளைய தீர்ப்பாகும். இதனை பார்த்த ரசிகர்கள், ” காலா ஹீரோயினா இது..?” என்று சந்தேகித்து வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2174

    157

    50