பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடிகள் கேட்கும் பிரபல நடிகர்.? ஆடிப்போன தொலைக்காட்சி நிர்வாகம்..!

Author: Rajesh
15 July 2022, 7:23 pm

இந்தியளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சி தற்போது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த அந்த மொழிகளில் பிரபலமான நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்களை கடந்துள்ளது, அந்த 15 சீசன்களையும் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

இதற்கிடையே சல்மான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேற பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் நிர்வாகமோ அவரை விடுவது இல்லை என்ற முனைப்புடனயே இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சிகாக நடிகர் சல்மான் வாங்கிய சம்பளம் ரூ.350 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 16-யை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் அதை விட மூன்று மடங்கு சம்பளத்தை கேட்டுள்ளார்.

அதன்படி தற்போது அவர் மூன்று மடங்கு சம்பளமாக ரூ.1050 கோடியை கேட்டுள்ளார் நடிகர் சல்மான் கான். இதைக்கேட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்காக இவ்வளவு சம்பளம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?