பைல்ஸ் அறுவை சிகிச்சை செய்தவருக்கு கேன்சர் நோய் : வசமாக சிக்கிய 10ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 4:58 pm

ஊத்துக்கோட்டையில் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது ..

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்முடிபூண்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு பைல்ஸ் மருத்துவம் பார்க்க வந்தபோது அவருக்கு சுபல்குமார் என்பவர் அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டைபோலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஊத்துக்கோட்டை அரசு தலைமை மருத்துவர் திருமாறன் என்பவர் சம்பந்தப்பட்ட கிளினிக் சென்று ஆய்வு கொண்டார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
எனவே அவர் மருத்துவர் இல்லை என்பதால் அவரை ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உத்துக்கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?