தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தவர் மோகன் ரவி. ஜெயம் படத்தில் நடித்து ஹிட்டானதால் மோகன் என்பதை எடுத்துவிட்டு ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார். இதன்பின் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த ஜெயம் ரவி நடிப்பில் பூமி படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வம் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி மக்கள் மத்தியில் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை பெற்று வருகிறார். பொன்னியின் செல்வன், அகிலன் போன்ற படங்களின் பிரமோஷன் விசயத்திற்காக பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் ஜெயம் ரவியிடம், அஜித்தா? விஜய்யா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அஜித் மீது மரியாதை உள்ளது, ஆனால் விஜய்யின் ரசிகன் தான் நான் என்று கூறிய பேச்சு வித்யாசமாக இருந்துள்ளது.
. @actorvijay ♥️ pic.twitter.com/dDARcJg3MU
— Deepa Vijay ツ (@Deepa_0ff) July 14, 2022
இதனை பார்த்த ரசிகர்கள் போதையில் பேசுவது போல பேசுறாரே என்று கலாய்த்தும் வருகிறார்கள். சிலர் அவர் பேச்சே அப்படி தான் இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.