சின்ன பையனா இருக்காரு..இல்லைன்னா, கால்ல விழுந்திருப்பேன்.. கதறி அழுத காமெடி நடிகர்..!
Author: Rajesh18 July 2022, 11:35 am
தமிழ் சினிமாவில் பிரபல மற்றும் மூத்த காமெடி நடிகர் தம்பி ராமையா. இவர் வடிவேலு அவர்கள், அந்தகாலத்தில் இருந்து நடிக்கும் போதே சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி அவருக்கு இணையாக கவுண்டர் அடித்து காமெடி வழங்கி வந்தார்.
தற்போது முன்னணி நட்சத்திரங்களாக விஜய், அஜித், நயன்தாரா, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் போன்றவர்களுடன் நடித்தும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு தான் அவர் அப்படி தேம்பி தேம்பி அழுகிறார். அவர் படம் வெளியான நேரத்தில் பார்க்க முடியாத காரணத்தால் ஒரு ஸ்பெஷல் சகிரீனிங்கில் சென்று தம்பி ராமையா பார்த்திருக்கிறார்.
ஒவ்வொரு வசனத்தையும் உள்ளே இருந்து எழுத்திருக்கிறான் தம்பி. இப்படி ஒரு படைப்பை கொடுத்த இவர் தான் மாமனிதன்.”சீனு ராமசாமி என்னை விட சின்னவர், இல்லை என்றால் காலை தொட்டு கும்பிடுவேன்” என சீனுராமி பின்னர் கூறி இருக்கிறார்.
"சீனுராமசாமி என்னை விட சின்ன பையன்.. இல்லைனா காலில் விழுந்திருப்பேன்" – மாமனிதன் படம் பார்த்த பிறகு தேம்பி அழுத தம்பி ராமையா!#SunNews | #Maamanithan | @VijaySethuOffl | @seenuramasamy pic.twitter.com/fBpYS8YCJA
— Sun News (@sunnewstamil) July 16, 2022