குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஓபிஎஸ் பாதியில் தடுத்து நிறுத்தம் : அதிகாரிகள் அறிவுறுத்தியதால் திரும்பி சென்றார்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 5:59 pm

சென்னை : குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த ஓ.பி.எஸ். பாதியிலேயே திரும்பிச் சென்றார்.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

இதையடுத்து பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஓபிஎஸ் அவர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க சென்றார். அப்போது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பி.பி.இ கிட் உடன் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை அடுத்து, போர் நினைவுச் சின்னம் அருகே திரும்பிச் சென்றார்.

பின்னர் 4 மணிக்கு மேல் பிபிஇ கிட்டுடன் வந்து வாக்களித்தார். இதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசரும் பிபிஇ கிட் அணிந்து தனது வாக்கினை செலுத்தினார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 734

    0

    0