நிறைமாத நிலவே வா வா… Pregnant போட்டோ ஷூட் : கிறங்கடிக்கும் நமீதா..!

Author: Rajesh
20 July 2022, 9:32 am

நடிகை நமீதா ஒரு இந்திய திரை பட நடிகை ஆவார் . இவர் தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும்சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.

தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் தற்போது நடிகை நமீதா கர்ப்பம் தரித்துள்ளார். சில நடிகைகள் கர்ப்பகால போட்டோசூட்டை நடத்துவது தற்போது வழக்கம் அண்ட் வகையில் நடிகை நமிதாவும் தன்னுடைய நிறைமாத வயிறு பளிச்சென்று தெரியும்படி போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

நமீதா தன்னுடைய நிறைமாத வயிறு தெரியும்படி உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை நமீதா விரைவில் தாயாக உள்ள நிலையில் அவருடைய தாய்மைக்கு ரசிகர்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!