72 மாணவர்களை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் : அரசுப் பள்ளியில் அரங்கேறிய பயங்கரம்.. கொந்தளித்த பெற்றோர்கள்..!!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2022, 6:16 pm
விழுப்புரம் : 12 ஆம் வகுப்பு ஆசிரியர் 72 மாணவர்களை பிரம்பால தாக்கியதால் காயமடைந்த நிலியல் மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு ஆசிரியர் நந்தகோபால் என்பவர் 72 மாணவர்களை பிரம்பால் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டன.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதற்றம் நிலை வருகிறது. பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய பெற்றோர்கள், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நேரில் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.