சமந்தாவிற்கு பிறகு பிரபல நடிகையை காதலில் வீழ்த்தினரா சித்தார்த்..? வைரலாகும் வீடியோ..!

Author: Rajesh
21 July 2022, 11:34 am

பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

இந்நிலையில், சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரி, இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவ்வபோது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள ஹோட்டலில் இவர்கள் வெளியேறி ஒரே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் மும்பையில் இருக்கும் ஒரு சலூனில் இருந்து நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் வெளியில் ஒன்றாக வருவதை பத்திரிக்கையாளர்கள் பார்த்துள்ளனர் மற்றும் போட்டோவுக்கு போஸ் கொடுத்துச்சென்றுள்ளனர்.

அவரை தொடர்ந்து நடிகர் சித்தார்த்தும் வெளியே வந்தார். போட்டோ எடுப்பவர்களை எடுக்க வேண்டாம் என்று கூறி அதிதி ஏறிய காரிலேயே ஏறி சென்றுள்ளராம். தற்போது அவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 746

    0

    0