“எத்தன வாட்டி பண்றீங்க” என்று கேட்ட நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்த நடிகை ! நீலிமா ராணி

Author: kavin kumar
21 July 2022, 12:20 pm

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.நடிகை நீலிமா ராணி இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது நீலிமா ராணிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் ராதே ஷ்யாம் திரைப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்திருந்த நீலிமா ராணி சமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். சமூகவலைத்தளங்களில் மிகவும் Active ஆகா இருக்கும் நீலிமா ராணி பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த சில நெட்டிசன்கள் கேட்ட முகம் சுளிக்க வைக்கும் கேள்விக்கு செருப்படி பதிலளித்துள்ளார் நடிகை நீலிமா.

நெட்டிசன் ஒருவர் உள்ளாடை சைஸ் கேட்டதற்கு , மற்றொரு நெட்டிசன் செக்ஸ் குறித்த கொச்சையான கேள்வி கேட்ட நிலையில் இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் சொல்வேன்’ என்று அந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?