ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : தண்ணீரில் தத்தளித்த கட்சி பிரமுகர்கள்… நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 12:57 pm

சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஒரு நிமிட இடைவெளியில் விபத்தில் இருந்து தப்பினார்.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோதாவரி நதி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்குவதற்காக சந்திரபாபு நாயுடு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் கோதாவரி நதியில் படகுமூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இன்று மாலை பயணித்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோம்பல்லி கிராமத்தை அவர் பயணித்த படகு அடைந்த நிலையில் சந்திரபாபு நாயுடு படகில் இருந்து இறங்கினார். இந்த நிலையில் படகு ஒரு பக்கமாக சாய்ந்து அதிலிருந்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தண்ணீரில் விழுந்தனர்.

இதனை கவனித்த அந்த கிராம மீனவர்கள், சந்திரபாபு நாயுடு பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஆற்றில் குறித்து அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.

  • Ajith Kumar Vidamuyarchi movie விடாமுயற்சி படத்தில் ட்விஸ்ட்…அஜித்துடன் இணைந்த பிரபல நடிகை..படக்குழு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!
  • Views: - 699

    0

    0