பொய் வாக்குறுதியால் விரக்தி : ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமான 50க்கும் மேற்பட்ட திமுகவினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 6:06 pm

மதுரையில் கழக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் திமுகவினர் இணைந்தனர்.

பொய் வாக்குறுதிகளை கூறிய ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்க கூடிய திமுகவின் கூடாரம் நாளுக்கு நாள் காலியாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வரக்கூடிய வேலையில்
மதுரையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று மதுரை பசுமலை பகுதியில் இருக்கக்கூடிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்களது இல்லத்தில் அவருடைய முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்,.

புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு சார்பு அணிவித்து வரவேற்ற ராஜன் செல்லப்பா தொடர்ந்து வரும் காலங்களில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இந்த நிகழ்வில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!