உங்க வேலைய சரியா செய்ய மாட்டீங்களா… புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்து அதிரடி..!!
Author: Babu Lakshmanan26 July 2022, 1:01 pm
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே சாலைகள் பராமரிப்பு சரியில்லாததால், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ. 400 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
தரமான சாலைகள், அமைப்பது வாகனங்களின் பயண நேரத்தை குறைப்பது, வாகன நெரிசலை தவிர்ப்பது என்ற குறிக்கோள்களோடு தங்கநான்கு வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதும் முக்கிய பகுதிகளில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லும் போது, வாகனங்களிடம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணமூலம் சாலைகளை பராமரிப்பது, வாகனங்களின் ஒளி வீச்சால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூசாமல் இருக்க சாலையின் மத்தியில் செடிகள் அமைப்பது என்று பல்வேறு வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதன்படி, தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியா புரத்தில் சுங்கச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த சுங்கச்சாவடியை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளது. ஆனால், இந்த சுங்கச்சாவடி சாலைகளை முறையாக பராமரிக்கவில்லை மற்றும் சுங்கச்சாவடி அருகே கழிப்பறை போன்ற வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை அடுத்து, கடந்த 2021ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் இந்த பகுதியில் ஆய்வு நடத்தியது. இதன் முடிவில் சாலைகளை முறையாக பராமரிப்பதற்காகவும், வாகன ஒட்டிகளுக்கு அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்காததுக்காகவும், இந்த சுங்கச்சாவடிக்கு ரூ. 400 கோடி அபராதத்தை பேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விதித்துள்ளது.