பாலத்தின் மீது சென்ற பைக் வெள்ளத்தில் சிக்கியது.. உயிருக்கு போராடிய வாகன ஓட்டி : வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 July 2022, 9:35 am

தெலுங்கானா : ஹைதராபாத் நகரில் உள்ள ஹிமாயத் சாகர் ஏரியிலிருந்து மலை வெள்ளம் பாலத்தின் மீது வழிந்து ஓடுகிறது. இந்த நிலையில் அந்த வழியாக பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்டன.

மோட்டார் சைக்கிள் போன்ற சிறிய வாகனங்கள் மழை தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவற்றை ஓட்டி சென்றவர்கள் பாலத்தின் ஓரத்தில் பொருத்தப்பட்டுள்ள கைப்பிடிகளை பற்றி உயிர் தப்பினர்.

மோட்டார் சைக்கிள் சென்ற நபர் ஒருவர் ஓடும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சுமார் அரை மணி நேரம் பாலத்தின் கைப்பிடியை பிடித்து நின்று கொண்டிருந்தார் அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

https://vimeo.com/733852514

இதனால் அந்த வழியாக செல்ல வேண்டாம் என்று பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்..

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…