கட்டு கட்டாக பணம்… அள்ள அள்ள கிடைத்த நகைகள்… அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில்…. ஷாக் ஆன அதிகாரிகள்…

Author: Babu Lakshmanan
28 July 2022, 3:39 pm

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சரின் பெண் உதவியாளர் வீட்டில் பல கோடி ரூபாயும், நகையும் பறிமுதல் செய்திருப்பது அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் அமைச்சரின் நெருங்கிய பெண் உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், மேற்குவங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர். அதில், ரூ.27.9 கோடி பறிமுதல்; ரூ.4.31 மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரின் நெருங்கிய உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணமும், நகையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!