ஆன்மீகத்தை அழிக்கவே முடியாது.. திமுக நடத்திய செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவே சாட்சி : அண்ணாமலை அதிரடி

Author: Babu Lakshmanan
28 July 2022, 8:48 pm

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகள் பங்கேற்கின்றன. இதுவரையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது.

இதைத் தொடர்ந்து, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார். முன்னதாக, பார்வையாளர்களின் கண்களை கவரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, 967ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மீக வழித்தடத்தையும் இனியும் மறைத்திட இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு நிகழ்ச்சி. இச்சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களும், நன்றியும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!