OLX மூலம் கூட்டுறவு நிறுவன காலி பணியிடங்களுக்கு ஆட்தேர்வா..? எச்சரிக்கை விடுக்கும் கோவை மாவட்ட நிர்வாகம்…

Author: Babu Lakshmanan
29 July 2022, 9:05 am

கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலிபணியிடங்கள் நிரப்பபடுவதாக விளம்பரப்படுத்தி மோசடி நடப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- OLX செயலி மூலம்‌ கூட்டுறவு வங்கிகளில்‌ காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்க செய்வதாகவும்‌, சேலம்‌, அம்மாப்பேட்டை, ஓமலூர்‌, மேட்டுர்‌, அந்தியூர்‌, பவனி, கோபிசெட்டிபாளையம்‌, பெருந்துறை, திருப்பூர்‌, எட்டிமடை, காரமடை, நாமக்கல்‌. சேந்தமங்கலம்‌, பரமத்தி வேலூர்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர்‌ பகுதிகளில்‌ கூட்டுற வங்கிகளில்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளதாகவும்‌, மேற்படி காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்வு செய்வதாகவும்‌, அதன்‌ பொருட்டு நேர்காணல்‌ நடைபெறுவதாகவும்‌, பணியின்‌ பொருட்டு டெபாசிட்‌ தொகை செலுத்த வேண்டும்‌ எனத்‌ தெரிவித்து OLX செயலி மூலம்‌ விளம்பரப்படுத்தி 8220433383 சாண்ற மொபைல்‌ எண்ணை‌ தொடர்பு கொள்ளத்‌ தெரிவித்துள்ள செய்தி முற்றிலும்‌ பொய்யாண செய்தி எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

மேற்படி OLX செயலி மூலம்‌, பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களை கொண்டு எவரும்‌, கூட்டுறவு நிறுவனத்தில்‌ வேலை காலியாக உள்ளது என்று நம்பி எவரிடமும்‌, பணத்தையோ, அல்லது உடமைகளை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்‌ எனவும்‌, கூட்டுறவு நிறுவனங்களில்‌ காலிப்பணியிடங்கள்‌ ஏதும்‌ நிரப்பிட தற்போது கூட்டுறவுத்‌ துறையின்‌ மாவட்ட ஆள்‌ சேர்ப்பு நிலையம்‌ மூலம்‌ எவ்வித அறிவிப்பும்‌ வெளியிடப்படவில்லை எனவும்‌, மேற்படி பரப்பப்பட்டுள்ள பொய்யாண தகவல்களை நம்பி பொதுமக்கள்‌ யாரும்‌ எவரிடமும்‌, பணம்‌, பொருள்‌, உடைமைகளை கொடுத்தால்‌ ஏமாற்றப்படுவீர்கள்‌ எனவும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ டாக்டர்‌ ஜி.சஸ்‌.சமீரண்‌ ஆப. அவர்கள்‌ பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்‌.

மேலும்‌, இது போன்ற OLX செயலி மூலம்‌ குற்ற நடவடிக்கையில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மீது, உரிய குற்றவியல்‌ நடவடிக்கை தொடரப்படும்‌ எனவும்‌, பொய்யான செய்திகளை பரப்பி பண மோசடியில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளார்‌.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!