குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. திண்டுக்கல்லில் நடந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
29 July 2022, 12:21 pm

திண்டுக்கல்லில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் வேடபட்டியைச் சேர்ந்த சந்தியாகு என்பவரது மகன் அருள் குணசேகரன் (37). மரம் வெட்டும் தொழிலாளி. நேற்று இரவு வேடபட்டி எரிவாயு தகனம் அருகே அருள் குணசேகரன் மற்றும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களுக்குள் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் அருள் குணசேகரனை சரமாரி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள், இரத்த வெள்ளத்தில் கிடந்த அருள் குணசேகரனை டூவீலரில் தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார். மேலும், சம்பவ இடத்தில் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், மற்றும் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட அருள் குணசேகரன், லிடியா மேரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், அருள் குணசேகரன் மீது திண்டுக்கல் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 647

    0

    0