கார் மீது புல்லட் மோதி விபத்து : கீழே விழுந்த வாகன ஓட்டி மீது மினி லாரி மோதி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2022, 8:11 pm
கேரள மாநிலத்தில் கார் மீது புல்லட் மோதி புல்லட்டிலிருந்த நபர் சாலையில் விழுந்த போது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள பந்தளம் எம்சி சாலையில் நேற்று மாலை 4 மணிக்கு பிரதீப் என்பவர் தனது புல்லட்டில் சென்ற போது முன்னாள் சென்ற கார் மீது மோதியுள்ளார்.
இதில் புல்லட்டிலிருந்து கீழே விழுந்த பிரதீப் மீது பின்னால் வந்த மினிலாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்தவரை பந்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீப், மீண்டும் கேரளா திரும்பி வந்து மர வியாபாரம் செய்து வந்தார்.பின்னர் விபத்திற்கு பிறகு நிற்காமல் சென்ற மினி லாரியை செங்குன்றம் போலீசார் தடுத்தி நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.