ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைப்பு : அடுத்தடுத்து விலை குறைப்பால் தொழிற்துறையினர் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 1:39 pm

ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் அனைத்து ரகத்திற்கும் கிலோவிற்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

பனியன் தயாரிக்க அடிப்படை தேவயான நூலானது, கடந்த ஜூன் மாதம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் 40 ரூபாய் குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு மாதமான ஆகஸ்டில் நூல் விலை கிலோவிற்கு மேலும் 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.333-க்கும், 34-ம் நம்பர் ரூ.375-க்கும், 40-ம் நம்பர் ரூ.395-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.325-க்கும், 34-ம் நம்பர் ரூ. 365-க்கும், 40-ம் நம்பர் ரூ.385-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நூல் விலை ரகத்திற்கு ஏற்றபடி 320 ருபாய் முதல் 400 ருபாய் வரை விற்கப்படுகிறது. அனைத்து வகையான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Popular Unmarried Actress Pregnant Photos Goes Viral திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!