அசால்ட்டாக செய்த ஜெயக்குமார்.. கப்சிப்பான கோவை செல்வராஜ்… அனைத்துக் கட்சி கூட்டத்தில் பரபர : வைரலாகும் வீடியோ…!!

Author: Babu Lakshmanan
1 August 2022, 2:03 pm

சென்னை : தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்த செயல் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. இதற்கான பணிகளை 2023 மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜூம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் முன்னதாகவே முதல் ஆளாய் வந்தார் கோவை செல்வராஜ். அப்போது அவர் முன்பாக அதிமுக என்ற பெயர் பலகை இருந்தது. இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து வந்து கோவை செல்வராஜ் அருகே அமர்ந்தார் ஜெயக்குமார். உடனே டக்கென்று அதிமுக என்னும் பெயர் பலகையை தங்கள் பக்கம் எடுத்து வைத்துக்கொண்ட அவர், சானிடைசரால் கையை சுத்தம் செய்தார். அதைப்பார்த்து கோவை செல்வராஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

ஒற்றைத்தலைமை பிரச்சினையால் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் பிரிந்த பின்னர் ஒருவரை ஒருவர் ஊடகங்களில் பேட்டி கொடுத்து சண்டை போட்டு வருகின்றனர். இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் அருகில் ஜெயக்குமார் அமர்ந்திருந்தும் அவர் பக்கம் முகத்தை திருப்பவேயில்லை.

அதுமட்டுமில்லாமல் கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பாக நானும், பொள்ளாச்சி ஜெயராமனும் பங்கேற்றோம் என்றும், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்றே தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி