ஜுனியர் NTR குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்… விபரீத முடிவால் அதிர்ந்து போன தெலுங்கு திரையுலகம்…!!

Author: Babu Lakshmanan
1 August 2022, 6:07 pm

தமிழ் திரையுலகிற்கு எப்படி சிவாஜியோ, அது போன்று தெலுங்கு பட திரையுலகிற்கு என்டிஆர் என அழைக்கப்படும் நந்தமுரி தரக்கா ராமராவ். இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவராவார். சினிமா துறையை தனது நடிப்பால் எப்படி ஆட்டிப் படைத்தாரோ, அதுபோன்று ஆந்திர அரசியலிலும் தவிர்க்க முடியாதவராக திகழ்ந்தார்.

தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி 3 முறை முதலமைச்சராக தேர்வானார் என்டிஆர். இவருக்கு மொத்தம் 8 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அவர்களில் ஹரி கிருஷ்ணாவின் மகன்தான் ஜுனியர் என்டிஆர். தனது தாத்தாவை போலவே இவரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகன் ஆவார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான RRR திரைப்படம் சக்கை போடு போட்டது.

இப்படி தலைமுறை தலைமுறையாக தெலுங்கு சினிமாவை ஆண்டு வரும் NTR-ன் குடும்பத்திற்கு தற்போது சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

என்டிஆரின் மகளும், ஜுனியர் என்டிஆரின் அத்தையுமான உமா மகேஸ்வரி, அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

என்டிஆரின் செல்ல மகளாக வளர்ந்து வந்த உமா மகேஸ்வரி, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் மணந்தார். பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்த வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்தார் உமா மகேஸ்வரி. பின்னர், ஸ்ரீனிவாச பிரசாத் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த சூழலில், ஐதராபாத்தில் உள்ள வீட்டில் உமா மகேஸ்வரி தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்டிஆரின் குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1188

    0

    0