காத்து இல்லாத சைக்கிளை வழங்கிய அமைச்சர் பொன்முடி.. மாணவர்கள் மத்தியில் பேசும் போது பவர் கட் : சமாளித்த காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2022, 2:41 pm

விழுப்புரம் : இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் சைக்கிள்களின் டயர்களில் காற்று இல்லாததால் வழங்கியது போல் போஸ் கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆசிரியர்கள் வால்வு டியூப் இல்லாத டயர்களில் காற்று அடித்த அவலம்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி 18 அரசு பள்ளிகளை சார்ந்த 3034 மாணவர்களுக்கு 1 கோடியே 49ஆயிரம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக அவசர அவசரமாக சைக்கிள் பாகங்களை இணைக்கும் பொழுது டயரில் உள்ள டியூப்பில் வால்வு பொருத்தாமல் அவசரத்தில் விட்டு விட்டனர்.

இது தெரியாமல் சைக்கிளில் காற்று இல்லை என்று நினைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் சைக்கிள்களில் காற்று அடித்து வந்தனர். ஆனால் வால்வு டியூப் பொருத்தப்படவில்லை என்று பின்னர் தான் தெரிந்து கொண்டனர்.

பின்னர் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவ மாணவிகளிடம் உரையாடிவிட்டு சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஒரே இடத்தில் சைக்கிள் வழங்கியது போல் போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுக்கப்பட்டது.

எந்த மாணவ மாணவிகளும் சைக்கிளை ஓட்டி செல்ல முடியாமல் சோகமாக அமர்ந்தனர். விழா மேடையில் அமைச்சர் பொன்முடி மாணவர்களிடையே உரையாற்றிய போது மின்சாரம் தடைபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய பொன்முடி தான் ஒரு பேராசிரியராக இருந்த காரணத்தினால் மாணவர்களுக்கு மைக் இல்லாமல் பாடம் நடத்திய அனுபவம் உண்டு என்பதால் மின்சார தடையை பற்றி கவலை இல்லை என கூறி தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 638

    0

    0