நாளை ஆடிப்பெருக்கு விழா… மஞ்சள் கயிறு, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகம்..!!
Author: Babu Lakshmanan2 August 2022, 10:16 pm
தமிழர்களின் பாரம்பரிய விழாவான ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாட உள்ள நிலையில், ஆடிப்பெருக்கு விழாவிற்கான மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தஞ்சையில் களைக்கட்டி உள்ளது
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விழாவாகும்.

காவிரி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருட்களை வைத்து காவிரி தாயை வழிப்பட்டு ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.
இந்த பொருட்கள் தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலை ஒர கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. இவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது.