கருட பஞ்சமியை முன்னிட்டு திருப்பதியில் கருட வாகன சேவை : தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 8:25 am

திருப்பதி மலையில் கருட பஞ்சமியை முன்னிட்டு ஏழுமலையானின் கருட வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது.

கருட பஞ்சமி நாளன்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று கருட பஞ்சமியை முன்னிட்டு கருட வாகன சேவை திருப்பதி மலையில் உள்ள மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

கருட வாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சமர்ப்பணங்களுக்கு பின் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் கருடவாகன சேவை கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 808

    0

    0