12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசேஜ் : தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan3 August 2022, 10:08 am
புதுச்சேரி : தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி, 100 அடி சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் ஆபாச மெசெஜ் அனுப்பி உள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கோரி மாணவியின்
பெற்றோர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்போட்டை போலீசார் விசாரணை நடத்தினர் மேலும் மாணவியிடம் குழந்தை நலக்குழுவினர் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பணிபுரியும் டேனியல் என்ற ஆசிரியர் மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமூக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.