புல்லாவெளி அருவியில் ஆபத்தான போட்டோசூட்… கால் தவறி விழுந்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 12:08 pm

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே புல்லாவெளி அருவிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞர், ஆபத்தான முறையில் போட்டோஷுட் நடத்திய போது, கால் தவறி விழுந்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நீரோடைகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய‌ன் (28) என்ற இளைஞர் கொடைக்கானல் கீழ்மலை கிரமமான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு ம‌லைக்கிராம‌ப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

அவர் தனது நண்பர்களுடன், கீழ்மலை கிராமமான பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, அங்குள்ள பாறை சரிவுகளில் ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்த போது, எதிர்பாராத விதமாக கால் த‌வறி அருவியின் ப‌ள்ள‌த்தாக்கு ப‌குதியில் விழுந்து மாய‌மாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவரை படம் பிடித்துக் கொண்டிருந்த நண்பர்களின் செல்போனில், அவர் தவறி விழும் பதைபதைக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து, நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், மாய‌மான‌ இளைஞரை தீயணைப்பு துறையினர் ம‌ற்றும் காவ‌ல்துறையின‌ர் இணைந்து தேடி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 852

    0

    0