களைகட்டிய உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா… சப்பரத்தில் பனிமய மாதா பவனி!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 1:10 pm

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமய மாதா பவனி நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயே திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு பன்மய மாதா அன்னை சப்பர பவனி நேற்று நடைபெற்றது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பனிமயமாதா அன்னை பவனி வந்தார். இப்பவனி பேராலய வளாகத்தை சுற்றி வந்தது. சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும், 11ம் திருவிழாவான இன்று காலை 7 மணிக்கு மறை மாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களிடம் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Ajith racing and movies நடிப்பிற்கு bye bye …அஜித் எடுத்த திடீர் முடிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
  • Views: - 675

    0

    0