ஆப்கனில் மதவழிபாட்டு தளம் மீது வெடிகுண்டு தாக்குதல் ; 8 பேர் பலி

Author: Babu Lakshmanan
6 August 2022, 8:47 am

ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தலிபான்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அந்நாட்டில் குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில், தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகே குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!