பிளவுகளை கடந்து அதிமுக நிச்சயம் ஒன்றிணையும்… மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும் : சசிகலா உறுதி..!!!
Author: Babu Lakshmanan10 August 2022, 2:12 pm
பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது :- புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன், எனக் கூறினார்.
தொடர்ந்து, தற்போதைய அதிமுகவின் பிளவுகள் உள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதலளித்த சசிகலா, “பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும். அதிமுக வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்,” எனக் கூறினார்.