ஒரே ஒரு வீடியோ… தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த தமன்னா… அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
13 August 2022, 5:06 pm

பொதுவாக, தென்னிந்திய மக்களின் உணவு, உடை, கலாச்சாரம் வட இந்திய மக்களின் கலாச்சாரத்தை விட வேறுபட்டதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல், பல குணங்களும் வெவ்வேறானவையாகவே இருக்கும். இவை அனைத்திற்கான வித்தியாசம் குறிப்பாக, சினிமாவின் மூலமே வெளிப்படும்.

அப்படி சினிமாவில் தென்னிந்தியாவிற்கு நடிக்க வரும் நடிகர், நடிகைகள், தமிழ் கலாச்சாரத்தை போற்றி பேசாமல் இருந்தது கிடையாது.

அந்த வகையில், பாலிவுட்டில் அறிமுகமாகி, தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய தமன்னா, 2006ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி, தனுஷுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக நடித்து பிரபலமான தமன்னா, தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘;பாகுபலி’ படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாகவும், துணிச்சலான பாத்திரத்திலும் நடித்து, சர்வதேச அளாவில் புகழ்பெற்றார். இதன்மூலம், தனக்கென்று தமிழகத்தில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இந்நிலையில், இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல இந்திய சினிமா பிரபலங்கள் கொண்டுள்ளனர். தமன்னா, டாப்ஸி, இந்தி நடிகர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும் அந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா செய்த செயல் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது, கடவுள் நம்பிக்கை கொண்டோரின் மனதை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார். அதாவது, விழாவின் தொடக்க நிகழ்வாக, குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட டாப்ஸி மற்றும் அனுராக் தார் ஆகியோர் காலணியை கழற்றாமல், அந்த விளக்கை ஏற்றினர்.

ஆனால், தமன்னா தான் அணிந்திருந்த மிகப்பெரிய Heals கொண்ட காலணியை கழற்றி விட்டு, வெறும் காலில் சென்று விளக்கை ஏற்றினர். இதன்மூலம், அவர் நம் கலாச்சாரத்தின் படி நடந்து கொண்டுள்ளார் என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 974

    27

    5