தஞ்சை பெரிய கோவிலில் வரிசை கட்டி நின்ற பக்தர்கள் : தொடர் விடுமுறையால் குவிந்த கூட்டம்… பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2022, 5:58 pm
தொடர் விடுமுறையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியக்கோவிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
தொடர் விடுமுறையை ஓட்டி தஞ்சை பெரியக் கோவில் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நாளை சுதந்திரம் தினம் என்பதால் பாதுகாப்பு கருதி மூன்று அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு, பக்தர்கள் முழு சோதனைக்கு உட்படுத்தி கோவிலுக்குள அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட வரிசையில பல மணி நேரம் காத்து இருந்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து சென்றனர். கோவில் வளாகம் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.