கம்பு சப்பாத்தி: ஆரோக்கியம் நிரம்பிய வெயிட் லாஸ் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
16 August 2022, 6:31 pm

சிறுதானிய வகையான கம்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதன் மகத்துவம் தெரிந்திருந்தும், நம் உணவில் கம்பு சேர்த்து சாப்பிடுவது மிக மிக குறைவாக உள்ளது. இத்தானியத்தை சுலபமான முறையில் நம் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடலாம். அப்படி ஒரு ரெசிபி தான் கம்பு சப்பாத்தி. இப்போது இந்த பதிவில் கம்பு சப்பாத்தி எப்படி செய்வது என பார்க்கலாம்.

கம்பு சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: கம்பு மாவு – மூன்று கப் கோதுமை மாவு – ஒரு கப் தண்ணீர் – இரண்டு கப் கடலை எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் மூன்று கப் கம்பு மாவு எடுத்து கொள்ளலாம்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து கம்பு மாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

*இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த கம்பு மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது தேவையான அளவுஉப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

*இந்த தண்ணீரை கலந்து வைத்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

*இறுதியில் கடலை எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

*மாவு ஊறியதும் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி கல்லில் விரித்து கொள்ளவும்.

*இதனை தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் ஆரோக்கியமான கம்பு சப்பாத்தி தயார்.

 

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?