தமிழகத்தில் மதுவிலக்கு எப்போது தெரியுமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்… அப்படினா, மதுவிலக்கு சாத்தியமில்லையா..?
Author: Babu Lakshmanan17 August 2022, 2:01 pm
தமிழகத்தில் ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது :- டாஸ்மாக் பார் டெண்டரில் 1778 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றுள்ளனர். டெண்டர் அறிவிப்பு வெளிப்படையாக உள்ளது. அனைவருக்கும் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
எந்த இடத்திலும் புகார்கள் இல்லை. டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி தவறான முறையில் கருத்தை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக புகார்கள் வெளியிடப்படும். தவறுகள் நடைபெற்றால் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுபான கடைகள் குறித்து இந்தியா முழுவதும் கொள்கை முடிவெடுத்தால் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும், என தெரிவித்துள்ளார்.