இயேசுவே இந்தியாவை ஆசிர்வதியும் : தேசியக் கொடியில் வாசகம் எழுதி பறக்கவிட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2022, 5:01 pm

தேசிய கொடியின் கீழ் இயேசுவே இந்தியாவை ஆசிர்வதியும் என்ற வசனம் எழுத்தப்பட்டது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 75 சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி மூன்று நாட்களில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி நாடு முழுவதும் பல்வேறு வீடுகளில் தேசியக்கொடியானது ஏற்றப்பட்டு இருந்தது. 15ஆம் தேதி மாலை அனைவரும் தேசிய கொடியை இறக்கிய நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமல் பறக்கவிட்டபடி இருந்தது.

மேலும் தேசிய கொடியின் கீழ் “இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்” என்ற வாசகமும் எழுதப்பட்டு தேசிய கொடியானது பறக்க விட்டபடி இருக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் சென்று அவ்வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.இதே போன்று நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசியக்கொடியில் இயேசு குறித்து எழுதிய ஆசிரியரை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!