எம்ஜிஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஓபிஎஸ்.. அதிமுகவில் மீண்டும் வர விடமாட்டோம் ; கொந்தளிக்கும் அதிமுக நிர்வாகி!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 7:33 pm

அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ் இனி அதிமுகவில் வருவதற்கு விட மாட்டோம் என்று கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்றும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லாததாகி விட்டது.

இதனையடுத்து, ஆங்காங்கே உள்ள அதிமுகவினர் தங்களது நிலைப்பாட்டினை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட அளவில் எடப்பாடி பழனிச்சாமி கோட்டையாக விளங்கும் நிலையில், மாவட்ட அளவில் அதிமுக தொண்டரும், அதிமுக நிர்வாகியுமான கே.என்.ஆர்.சிவராஜ் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், அதிமுக கோயிலான எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து நொறுக்கிய ஒ.பி.எஸ் இனி அதிமுகவில் வருவதற்கு கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விடமாட்டோம் என்றும், இந்த திமுக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று சர்ட்டிபிகேட், கொடுக்கும் ஒ.பி.எஸ் மகன், ஒ.பி.எஸ் எந்த ஒரு பொதுக்குழுவிற்கும் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமி 98 விழுக்காடு ஆதரவாளர்களை கொண்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். ஆகவே இந்த தீர்ப்பு உண்மையான அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை இது முரணான தீர்ப்பு, என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?