பட்டா மாறுதலுக்கு பணத்த வெட்டு.. ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 9:19 pm

கோவில்பட்டி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே .சிதம்பராபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷன் செய்ய விண்ணப்பம் செய்துள்ளார்.

சப் டிவிஷன் செய்து தர கே. சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராகவன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுறுத்தலின்படி ராகவன், ரூ. 14 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அப்போது, அங்கு இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?